சேலம்: மேட்டூர் அருகே மேச்சேரி பகுதியில், சாலையில் நடந்து சென்றபோது கடிக்க வந்த வளர்ப்பு நாயை கம்பைக் கொண்டு விரட்டியடித்த அரசு மருத்துவர் குமார்(39) மீது நாயின் உரிமையாளர்கள் மாதேஷ் மற்றும் அவரது தாய் பாப்பா(60) வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். மருத்துவரின் தலை, கை, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேச்சேரி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
