×

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை: இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி!

லண்டன்: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து உளவுத்துறை அமைப்பின் தலைவர் ரிச்சர்ட் மோரி . இவர் இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரிச்சர்ட் மோரி பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய அதிபர் புதின் விரும்பவில்லை. அமைதி பேச்சுவார்த்தைக்கு புதின் முன்வருவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. புதின் நம்மை அவருடன் இணைத்துக் கொண்டிருக்கிறார். புதின் தனது ஏகாதிபத்திய வழிமுறையை திணிக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரால் வெற்றிபெற முடியாது. உக்ரைனில் சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம் என்று புதின் நினைத்தார். ஆனால், அவரும் மற்றவர்களும் உக்ரைனை குறைத்து மதிப்பிட்டுவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Mint ,Ukraine ,UK ,Richard Mory ,London ,Richard Mori ,UK Intelligence Organisation ,Turkey ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரை தாக்குதல் பலி 16 ஆக...