×

சென்னையில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாலை நேரத்தில் மழை பெய்தது. சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இதன் காரணமாக சென்னைக்கு வந்த கொச்சி, தூத்துக்குடி, மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வந்த 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. சென்னையில் இருந்து குவைத், துபாய், டெல்லி, கோவா, மங்களூருக்கு புறப்பட வேண்டிய 15 விமானங்கள் ஒரு மணி நேர தாமதத்துக்கு பிறகு புறப்பட்டன.

Tags : Chennai ,Meteorological Centre ,Tamil Nadu ,
× RELATED வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்: சென்னையில் 7 விமானங்கள் ரத்து