×

கொடிக்கம்பம் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டுதல் வகுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு

சென்னை: கொடிக்கம்பம் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டுதல் வகுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது. விதிமுறைகளை அமல்படுத்தாவிடில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். கொடிக்கம்பங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை அனைத்து கட்சிகளும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது. பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் நேரில் ஆஜராகினர்.

Tags : ICOURT ,Government of Tamil Nadu ,Chennai ,
× RELATED கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில்...