×

மருது சேனை தலைவர் ஆதிநாராயணனின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணனின் முன்ஜாமின் மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு டிஜிபிக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதம் வெளியான விவகாரத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.அப்போது காவல்துறை தரப்பில் வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருவதால் ஆதிநாராயணன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது. காவல்துறையின் வாதத்தை ஏற்று முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

Tags : High Court ,Marudhu Sena ,Adhinarayanan ,Madurai ,Court ,Marudhu ,Sena ,Enforcement Directorate ,Tamil Nadu DGP ,CBI ,
× RELATED அரசு பணிகளில் இட ஒதுக்கீடு...