×

தூய சக்தி உள்ளிட்ட எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம்; திமுகவிடம் இருப்பது மக்கள் சக்தி: அமைச்சர் ரகுபதி பதிலடி

சென்னை: தூய சக்தி உள்ளிட்ட எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம்; திமுகவிடம் இருப்பது மக்கள் சக்தி என அமைச்சர் ரகுபதி பதில் தெரிவித்துள்ளார். சினிமா வசனம் போல் தீய சக்தி, தூய சக்தி என விஜய் கூறுவதாகவும் அவர் விமர்சித்தார். விஜய்க்கு சிலப்பதிகாரம் தெரியாது; அவருக்கு எழுதிக் கொடுத்தவர்களுக்குத்தான் தெரியும். பெரியாரை கொள்கை தலைவராக விஜய் ஏற்றுக் கொண்டபோது திராவிடத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். திராவிடத்தை ஏற்றுக் கொண்டதை, பாஜகவின் சி டீமாக இருக்கக் கூடிய விஜய் மறைத்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

Tags : Minister ,Ragupati ,Chennai ,Dimuq ,Vijay ,
× RELATED கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில்...