×

ஆரோக்கியமற்ற குடல் இதயத்துக்கு ஆபத்து: மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னை: நமது குடல் ஆரோக்கியம் என்பது வெறும் செரிமானத்தை பற்றியது மட்டுமே அல்ல என்றும் அது இதயத்தின் செயல்பாட்டுடனும் தொடர்புடையது எனவும் இதய மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குடலில் ஏற்படும் பிரச்னைகள் ஒட்டுமொத்த உடல்நலத்தையும் பாதிக்கும் என்றும் குறிப்பாக இதயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இதய நோய் நிபுனரான டாக்டர் அலோக் சோப்ரா தெரிவிக்கிறார். ஆரோக்கியமற்ற குடல் நச்சுக்களை உற்பத்தி செய்வதாகவும், அவை இரத்த ஓட்டத்தில் நூழைந்து வீக்கத்தை ஏற்படுத்தி இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

எனவே குடலை பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலம் செரிவான பிரச்னைகள் மட்டுமல்லாமல் உயர் இரத்த அழுத்தம், நீரிழவு மற்றும் இதய பிரச்னைகளின் அபாயத்தை குறைக்கலாம் எனவும் டாக்டர் அலோக் சோப்ரா கூறுகிறார். எனவே குடலை பாதுகாக்க கார்பனேட்டட் பானங்கள் வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்திக்கிறார். மேலும் குறைந்த துக்கம் அதிக மன அழுத்தம் போன்றவையும் குடல் செயல்பாட்டை பாதிக்கும் என்று எச்சரிக்கிறார்.

ஆகவே மெதுவாகவும், உணர்வு பூர்வமாகவும் சாப்பிடுவது, உணவு அளவை கட்டுப்படுத்துவது, சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடப்பது போன்ற வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நார்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டுமென்றும் அது குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்களுக்கு உணவளிப்பதாகவும் டாக்டர் அலோக் சோப்ரா தெரிவிக்கிறார்.

Tags : Chennai ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...