×

‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி

 

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. அந்த உறுதிமொழியில் கூறியிருப்பதாவது: ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடி குடும்பத்தினரும் சேர்ந்து தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதியேற்கிறோம். நான், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என உறுதியேற்கிறேன். வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்ஐஆர்க்கு (தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்) எதிராக நிற்பேன். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என உறுதியேற்கிறேன்.

நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன். ஒருபோதும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என உறுதியேற்கிறேன். தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என உறுதியேற்கிறேன். பெண்கள்-விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என உறுதியேற்கிறேன் என உறுதிமொழி எடுத்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் 68,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

 

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Oraniyil Tamil Nadu Movement ,Anna Arivalayam ,DMK ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...