துபாய்: ஆசிய கோப்பை டி20 போட்டியில் நேற்று, இலங்கை அணிக்கு எதிராக ஆடிய ஹாங்காங் அணி, 20 ஓவரில், 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. ஆசிய கோப்பை டி20 8வது போட்டியில் நேற்று, பலம் வாய்ந்த இலங்கை, ஹாங்காங் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஹாங்காங் அணியின் ஜீசன் அலி, அன்ஷி ராத் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்த நிலையில் ஜீசன் (23 ரன்), துஷ்மந்த சமீரா பந்தில் ஆட்டமிழந்தார். பின் வந்த பாபர் ஹயாத் 4 ரன்னில் ஹசரங்கா பந்தில் வீழ்ந்தார். பின் இணை சேர்ந்த அன்ஷி ராத், நிஜாகத் கான் அற்புதமாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்தனர். அப்போது அன்ஷி ராத் 48 ரன்னில் ஆட்டமிழந்தார். பின் வந்த கேப்டன் யாஸிம் முர்தாஜா 5 ரன்னில் அவுட்டானார். 20 ஓவர் முடிவில் ஹாங்காங், 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. அந்த அணியின் நிஜாகத் கான் 52 ரன், ஐஸாஸ் கான் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். அதையடுத்து, 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை வீரர்கள் களமிறங்கினர்.
