×

கலைஞர் அறக்கட்டளை சார்பாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் உதவித்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 

சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பாக 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்திற்கான உதவித் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த 5 கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையை கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் முதல் 2007 ஜனவரி வரை வழங்கப்பட்டு வந்தது. வைப்பு நிதியாக போடப்பட்ட 5 கோடி ரூபாயில், 30வது புத்தகக் கண்காட்சியை 2007ம் ஆண்டு திறந்து வைத்து, கலைஞர் பேசுகையில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள 4 கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.6 கோடியே 31 லட்சத்து 90 ஆயிரம். இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2,00,000 (2 லட்சம்) நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது. கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவம் உதவி நிதியாக இதுவரை ரூ. 6 கோடியே 31 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 2012 ஜூன் மாதம் முதல் உதவித் தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும் 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ரூபாய் 25 ஆயிரமாக உயர்த்தியும் வழங்கப்படுகிறது.

 

Tags : Artists Foundation ,Mu ,Stalin ,Chennai ,Artist Karunanidhi Foundation ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...