- தேவாரம்-கோம்பை
- தேவாரம்
- கோம்பை
- மேலசிந்தலைசேரி
- தம்மிநாயக்கன்பட்டி
- லட்சுமி
- நாயக்கன்பட்டி
- தே.சிந்தலைசேரி
தேவாரம், செப்.15: தேவாரம் – கோம்பை மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மணல் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவாரம், கோம்பை, மேலசிந்தலைசேரி, தம்மிநாயக்கன்பட்டி, லட்சுமி நாயக்கன்பட்டி, தே.சிந்தலைசேரி விலக்குப் பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் அதிக அளவில் மணல் சேர்ந்து குவியல்களாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும் வேகமாக வரும் டூவீலர்கள் சறுக்கி விழும் நிலை உள்ளது. இதனால் இந்த மணல் குவியல்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
