- மட்பாண்டங்கள்
- சென்னை
- தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள்
- குலாலர்
- ஒழுங்கமைக்கப்படாதது
- சங்கம்
- ஜனாதிபதி
- செமா.நாராயணன்
- பொதுச்செயலர்
- கணபதி
- பொருளாளர்
- மகேஷ் கண்ணன்
- ஒருங்கிணைப்பாளர்
- பழனி
- பிரதி பொது செயலாளர்
- மா. அன்பரசு
சென்னை: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் சேம.நாராயணன் தலைமையில் நேற்று சென்னையில் நடந்தது. பொதுச்செயலாளர் கணபதி, பொருளாளர் மகேஷ் கண்ணன், ஒருங்கிணைப்பாளர் பழனி, துணை பொதுச்செயலாளர் மா.அன்பரசு, மாநில மாணவர் அணி தலைவர் கே.ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பிறகு மாநில தலைவர் சேம.நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது: பருவமழை காலங்களில் மழைக்கால நிவாரண உதவித்தொகையாக மண்பாண்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.5 ஆயிரம் வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் பொதுச் செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், பி.ஜவகர் பாபு, ராஜம் எம்பி நாதன், ராணி கிருஷ்ணன், துணைத் தலைவர்கள் விடியல் சேகர், சக்தி வடிவேல், முனவர் பாஷா உள்பட பலர் பங்கேற்றனர்.
