×

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் முதலை கடித்து பலி

திருவண்ணாமலை: இன்று ஞாயிறு காலை என்பதால் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த சாத்தனூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவன் முனீஸ்வரனை முதலை இழுத்துச் சென்றதில் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் முனீஸ்வரன்(18). இவர் திருவண்ணாமலை அரசு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று நண்பர்களுடன் முனீஸ்வரன் மீன் பிடிக்க சென்ற போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் இருந்த முதலை அவரது வலது காலை கடித்து தண்ணீருக்குள் இழுத்து சென்றது.

அப்போது வலியில் கதறிய முனீஸ்வரனை அவரது நண்பர்கள் காப்பாற்ற முயற்சி செய்தனர். முனீஸ்வரனை முதலை தண்ணீருக்குள் இழுத்து சென்றதால் நண்பர்கள் போராடி சடலமாக மீட்டனர். இந்தனை அடுத்து அவரது உறவினர்களுக்கும், சாத்தனூர் காவல்நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதன்பெயரில் முனீஸ்வரனின் உடலை கைபற்றிய காவல்துறையினர் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து முனீஸ்வரனின் நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : Chathanur Dam ,Tiruvannamalai district ,Tiruvannamalai ,Chattanur Dam Reservoir ,Chhattanur Dam ,Chengata ,Kannan ,Chhatanur, Tiruvannamalai District ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...