×

விழுப்புரத்தில் பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் மாயம்

விழுப்புரம், செப். 14: பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் திடீர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார் மகள் சுவேதா(22). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் சொந்த ஊருக்கு சென்ற சுவேதா வெளியில் தனது தாயுடன் சென்றவர், தன் பிறகு அவருடன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்து பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து ரமேஷ்குமார் அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Villupuram ,Ramesh Kumar ,Suvetha ,Periyar Nagar ,Chennai.… ,
× RELATED செல்போன் டவரில் திருட முயன்றவர் கைது