×

முதியவர் மாயம் போலீசில் புகார்

கடலூர், டிச. 18: கடலூர் அருகே ஓட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன்(67). இவர் சம்பவத்தன்று திருவந்திபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கிருந்தவர்களிடம், தான் வடலூர் செல்வதாக கூறிவிட்டு சென்றவர், அதன் பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மகன் செல்வம் அளித்த புகாரின்பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து கன்னியப்பனை தேடி வருகின்றனர்.

Tags : Mayam ,Cuddalore ,Kanniyappan ,Otteri ,Thiruvananthapuram Government Primary Health Centre ,Vadalur ,
× RELATED செல்போன் டவரில் திருட முயன்றவர் கைது