- திருப்புவனை
- புதுச்சேரி திருப்புவனாய்
- சப்-இன்ஸ்பெக்டர்
- கார்த்தீசன்
- பி.எஸ்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி
திருபுவனை. டிச. 17: புதுச்சேரி திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிஎஸ் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சந்தேகத்துக்கிடமாக 3 வாலிபர்கள் நின்றுகொண்டு இருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றதால் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்த போது அவர்களிடமிருந்து 139 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள சிறுவந்தாடு பகுதியை சேர்ந்த சுபாஷ் (29) பி.எஸ்.பாளையம் பகுதியை சேர்ந்த சிந்தனை தாசன் என்ற தாஸ் (22), முகேஷ் (23) என தெரியவந்தது.மேற்கொண்டு நடத்திய விசாரணையில், வேலை இல்லாததால் கஞ்சா விற்கும் தொழிலில் ஈடுபட்டதாகவும், பள்ளி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை கஞ்சா தடுப்பு சட்டத் தின் கீழ் போலீசார் கைது செய்து, மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த மொத்த வியாபாரி யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
