- பாளையம்
- வெள்ளைப் பிள்ளையார் கோயில்
- Kengavalli
- கும்பாபிஷேகம் திருவிழா
- வெள்ளாய்
- பிள்ளையார் கோயில்
- ஆத்தூர்
- யாகசலை பூஜை
- விக்னேஸ்வரா
- பூஜை
- அறங்காவலர் குழு…
கெங்கவல்லி, செப்.14: ஆத்தூரில் பிரசித்தி பெற்ற வெள்ளை பிள்ளையார் கோயில் கும்பாபிஷேக விழா, வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று(14ம் தேதி) பாலாலயம் நடக்கிறது. இதற்காக நேற்று மாலை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்டாலின், செயல் அலுவலர் சங்கர், கவுன்சிலர் ஜீவா ஸ்டாலின், அறங்காவலர்கள் சித்ரா மணிகண்டன், குகன், சிவக்குமார் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
