×

தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் இளையராஜாவின் பாராட்டு விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை..!!

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் இளையராஜாவின் பாராட்டு விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. பாராட்டு விழாவில் வெளிநாட்டு கலைஞர்களுடன் இளையராஜாவின் சிம்பொனி கச்சேரி நடைபெறுகிறது. பாராட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இளையராஜா இசையமைத்த முதல் படம் அன்னக்கிளி வெளியாகி 50 ஆண்டு ஆகும் நிலையில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Ilayaraja ,Tamil Nadu government ,Chennai ,Nehru Indoor Stadium ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...