- பெரியார்
- அமைச்சர்
- கோவை.செழியன்
- சென்னை
- அண்ணா பொது வாழ்க்கை மையம்
- திராவிட வரலாற்று ஆராய்ச்சி மையம்
- பல்கலைக்கழக
- சென்னை
- திராவிட இயக்கம்
- உயர்
சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தில் அண்ணா பொது வாழ்வியல் மையம் மற்றும் திராவிடர் வரலாற்று ஆராய்ச்சி மையமும் இணைந்து திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: ஒரு பெண் கல்வி கற்கும்போது, ஒரு முழு குடும்பமும், சமூகமும் மேம்படும் என்பதால் பெண்களுக்கு பெரும்பாலும் பள்ளிப்படிப்பு மறுக்கப்பட்ட காலத்தில், பெரியார் பெண்களின் கல்வி உரிமைக்காக போராடினார். அவரது தொலைநோக்குப் பார்வையால், தமிழ்நாடு பெண் கல்வியறிவு மற்றும் அதிகாரமளிப்பில் முன்னணியில் உள்ளது. பெண் உரிமைக்காக ஆயுட்காலம் முழுவதும் பெரியார் பாடுபட்டார். பள்ளி கல்லூரிகளில் பகுத்தறிவினை வளர்க்கும் கருத்துகளை மாணவ சமுதாயத்திற்கு பயிற்றுவிக்க வேண்டும், மூட நம்பிக்கைகளை ஏற்படுத்தும் கருத்துகளை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க கூடாது என முதல்வர் ஆணையிட்டுள்ளார். பெரியாரின் சமூகநீதி கோட்பாட்டினை தன்னுடைய சிறப்பான ஆட்சியின் மூலம் செயல்படுத்தி வருகிறார். பெரியாரின் தத்துவங்கள், கருத்துகள் உலகம் முழுவதும் பரவியுள்ளது. திராவிட சித்தாந்தத்தினை நினைக்காத மனிதர்கள் இச்சமுதாயத்தில் இருக்க முடியாது. இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
