சென்னை: பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: மாநில பாடத்திட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திறன் திட்டத்தில் மாணவர்களுக்காக வரவிருக்கும் காலாண்டு தேர்வுகளில் திறன் பாடப்புத்தகம் சார்ந்து வினாத்தாள்கள் தயாரித்து வழங்கப்பட உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள்கள், அடிப்படை கற்றல் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. அனைத்து வினாத்தாள்களையும் https://exam.tnschools.gov.in என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். எனவே தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
