சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையத்தை சேர்ந்த நல்லம்மாள் என்பவரின் பேரன் அருண் என்பவருக்கு 1916 சதுர அடி மனை இடத்தை பத்திரப்பதிவு செய்வதற்கு நம்பியூரை சேர்ந்த சேதுபதி என்பவர் மூலம் பத்திர பதிவு செய்ய அணுகியுள்ளார். சத்தியமங்கலம் சார்பதிவாளர் தமிழ்செல்வனிடம் பதிவு செய்வதற்காக கேட்ட போது மனை இடத்தை பத்திர பதிவு செய்ய ரூ.15,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதை நேற்று காலை சார் பதிவாளர் தமிழ்செல்வன் மற்றும் தற்காலிக பணியாளர் சக்திவேல் ஆகியோரிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
