×

மத்தியஸ்தர் பேச்சுவார்த்தையில் முடிவு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்- பெப்சி இடையே சமரசம்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு முடித்துவைப்பு

சென்னை: தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் பெப்சிக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய சங்கத்தை தொடங்கியதால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் பெப்சி அமைப்பின் உறுப்பினர்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும்என்று பெப்சி கடிதம் அனுப்பி இருந்தது. இதை எதிர்த்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பிரச்னையை தீர்ப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜனை மத்தியஸ்தராக நீதிமன்றம் நியமித்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தியஸ்தர் நடத்திய பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டதாக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணா, பெப்சி சார்பில் வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Tags : Film Producers Association ,Pepsi ,Chennai ,Tamil Film Producers Association ,Tamil Nadu Film Workers Association ,Tamil Film Producers Association… ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...