×

வன்கொடுமை சட்டத்தை முறையாக விசாரித்து நீதி வழங்கவில்லை என காஞ்சி காவல் துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், செப்.13: காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பில், மாவட்ட காவல் துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று நடத்தப்பட்டது. இதில் ஆ.கார்த்திக், கார்த்திகேயன், லிங்கேஸ்வரன், நரேந்திரன், திருப்பதி, கதிரவன், வெங்கட்ராமன், எஸ்.எஸ்.ஆர்.சசிகுமார், வித்தகவேந்தன், மதிஆதவன், அருள்நாதன், கேதர்நாத், உமா, மாலதி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்று, காவல் துறையை கண்டித்து பேசினர். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக வன்கொடுமை வழக்குகளில் முறையாக சட்டத்தை பின்பற்றாமல் அலட்சியப் போக்குடன் ஈடுபட்டு வரும் காவல் துறையை கண்டித்தும், இதுவரை வன்கொடுமை சட்டத்தில் முறையான விசாரணை செய்து நீதி வழங்கவில்லை.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பல்வேறு சம்பவங்ககளை, காவல்துறை கண்டு கொள்ளாமல் மெத்தனப் போக்கில் செயல்படுவதையும், பல்வேறு குற்றச்சம்பவங்களை உரிய முறையில் விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது உத்தரவை காவல் துறையினர், உயர்நீதிமன்றம் வரை கொண்டுச்சென்று ரத்து செய்ததை கண்டித்து விரைவில் மேல்முறையீடு செய்வோம் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதில் கருணாநிதி ஸ்டாலின் மகா சதீஷ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Kancheepuram Police Department ,Kancheepuram ,Kancheepuram Collectorate ,Kancheepuram District Lawyers ,District Police Department ,A. Karthik ,Karthikeyan ,Lingeswaran ,Narendran ,Tirupathi ,Kathiravan ,Venkatraman ,S.S.R. Sasikumar ,Vidhakavendan ,Mathiadhavan ,Arulnathan ,
× RELATED மின் வாரிய அலுவலகம் முன்பு கொட்டப்படும் கட்டிட கழிவுகள்: அகற்ற கோரிக்கை