×

நேபாள சமூக நெருக்கடிகளுக்கு காங்கிரஸ் காரணமா?: பீகார் துணை முதல்வர் கருத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!

சென்னை: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு காரணம் காங்கிரஸ்தான் என கூறிய கருத்தை சாம்ராட் சௌதரி உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பீகார் மாநில துணை முதலமைச்சர் சாம்ராட் சௌதரி அவர்கள் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு காரணம் இந்திய தேசிய காங்கிரஸ்தான் காரணம் என்று வெளியிட்ட கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை, தவறானவை, அவரின் இந்தக் அவதூறு கருத்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவரின் இந்த கருத்து அண்டை நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகும்.

நேபாளம் என்பது சுதந்திரமும், இறையாண்மையும் கொண்ட நாடு. அங்கு நடைபெறும் அரசியல், சமூக சம்பவங்களுக்கு இந்திய காங்கிரஸ் கட்சியைக் குற்றம் சொல்வது வரலாற்று உண்மைகளுக்கு மாறானது. சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே காங்கிரஸ் கட்சி அண்டை நாடுகளின் இறையாண்மையையும், ஜனநாயக மரபுகளையும் மதித்து வந்துள்ளது.

பீகார் துணை முதலமைச்சர் கூறியிருக்கும் வை மட்டுமல்லாமல், இந்தியா – நேபாள உறவை பாதிக்கும் வகையிலும் இருக்கின்றன. அண்டை நாடுகளை மதித்து, நல்லுறவை பேணுவது தான் இந்தியாவின் பாரம்பரியக் கொள்கை. அந்தக் கொள்கையை பாஜக தலைவர்கள் தங்கள் அரசியல் லாபத்திற்கு பயன்படுத்தக் கூடாது.

எனவே, சாம்ராட் சௌதரி அவர்கள் உடனடியாக தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில், காங்கிரஸ் கட்சி ஜனநாயக முறையில் மக்கள் முன்னிலையில் வலுவான முறையில் எதிர்வினையாற்றும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Congress ,Nepal ,Selvapperundhagai ,Bihar ,Chief Minister ,Chennai ,Tamil Nadu Congress Committee ,President ,Samrat Chowdhury ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...