×

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் காரணமாக பச்சை வழித்தடத்தில் தற்காலிக மாற்றம்

 

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டம் கட்ட கட்டுமானம் பணிகள் காரணமாக பச்சை வழித்தடத்தில் தற்காலிக மற்றம் செய்யப்பட்டுருக்கிறது. வருகின்ற 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை ரயில்சேவைகளில் இந்த தர்களிக மற்றம் இருக்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாணம் தெரிவித்துருக்கிறது.

பச்சை வழித்தடத்தில் கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் தற்காலிகமக மாற்றி அமைக்கபட்டு இருக்கிறது. காலை 5 -6 மணி வரை பரங்கி மலை முதல் அசோக் நகர் வரை 14 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாணம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுருக்கிறது.

விமான நிலையும் மெட்ரோ நிலையும் முதல் அசோக் நகர் வரை 14 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கபடும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. சென்ட்ரல் முதல் கோயம்பேடு வரை 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிக்கை தெரிவிக்கப்பட்டுருக்கிறது. கோயம்பேடு முதல் அசோக் நகர் மெட்ரோ நிலையம் வரை காலை 5-6 மணி வரை மெட்ரோ ரயில்கள் நிறுத்தம் என்ற முக்கியஅறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு, அசோக் நகர் மெட்ரோ இடையே 10 நிமிடங்கள் இடைவெளியில் சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் தொடங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுருக்கிறது.

Tags : Chennai ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...