முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மெயின் அணை, பேபி அணை, மண் அணை, உபரி நீர் மதகுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பிறகு இரு மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டமும் நடந்தது. ஆய்வு அறிக்கை மத்திய கண்காணிப்புக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
