×

அடுத்தாண்டு தொடக்கத்தில் டி20 உலக கோப்பை தொடரை நடத்த ஐசிசி திட்டம்!

டெல்லி: 20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் உட்பட 15 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இத்தொடருக்கான போட்டி அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 55 போட்டிகள் இந்தியாவில் 5 நகரங்களிலும், இலங்கையில் இரு இடங்களிலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இலங்கையில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு வேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால், இறுதி ஆட்டத்தை கொழும்புக்கு மாற்றவும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது.

Tags : ICC ,T20 World Cup ,Delhi ,10th T20 World Cup cricket series ,India ,Sri Lanka ,World Cup ,Australia ,England ,Zealand ,Pakistan ,
× RELATED ஹவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்...