- பளை
- கவின்
- நெல்லை
- பாளையங்கோட்டை காவல் நிலையம்
- காசிபாண்டியன்
- நெல்லை டவுன்
- காவல் நிலையம்
- நகரம்
- தில்லை நாகராஜன்
- தச்சநல்லூர்
- இன்ஸ்பெக்டர்
- மகேஷ்குமார்
- பாளையங்கோட்டை
நெல்லை: நெல்லை மாநகரத்தில் முக்கியமான காவல் நிலையமாக பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் விளங்கி வருகிறது. இங்கு இன்ஸ்பெக்டராக இருந்த காசி பாண்டியனை நெல்லை டவுன் காவல் நிலையத்துக்கும், டவுன் இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜனை தச்சநல்லூருக்கும், தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமாரை பாளையங்கோட்டைக்கும் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாறுதல் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவிட்டுள்ளார். காசிபாண்டியன் பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டராக இருந்தபோது காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காதலியின் பெற்றோர் இருவரும் போலீஸ் துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த வழக்கு பாளையங்கோட்டை போலீசில் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் தற்போது அவர் நெல்லை டவுனுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
