×

பாலியல் தொழிலாளிகளிடம் செல்பவர்களை வாடிக்கையாளர்கள் என்று கருத முடியாது : கேரள உயர்நீதிமன்றம் அதிரடி

திருவனந்தபுரம்: பாலியல் தொழிலாளிகளிடம் செல்பவர்களை வாடிக்கையாளர்கள் என்று கருத முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 18, 2021 அன்று, பேரூர்கடா காவல்துறையினர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் சோதனை நடத்தினர். அங்கு மனுதாரரும் பாலியல் தொழிலாளி ஒருவரும் போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து போலீஸ் சோதனையில் சிக்கியவர் தான் வாடிக்கையாளர் என்றும் தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் முறையிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ஜி.அருண், பாலியல் சேவை பெறுபவர் பாலியல் தொழிலை தூண்டுவதாக தீர்ப்பளித்தார். மேலும் பாலியல் தொழிலாளியிடம் சென்றவர் மீது வழக்குப் பதிவு செய்ததை உறுதி செய்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் நீதிபதி, ‘பாலியல் தொழிலாளிகளிடம் செல்பவர்களை வாடிக்கையாளர்கள் என்று கருத முடியாது. வாடிக்கையாளர் என்பவர் பொருள் அல்லது சேவையை பெறுபவர்; பாலியல் தொழிலாளியை ஒரு பொருள் என கொச்சைப்படுத்த முடியாது. பாலியல் தொழிலை தூண்டுபவரை வாடிக்கையாளராக கருதினால் பாலியல் தடுப்புச் சட்டத்தின் நோக்கம் சிதைந்துவிடும்’ இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

Tags : Kerala High Court ,Thiruvananthapuram ,Barurghada ,
× RELATED பஞ்சாப் ஆளும் ஆம்ஆத்மியில் பரபரப்பு;...