×

திருநெல்வேலியில் பொருநை அருங்கட்சியத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

திருநெல்வேலி: திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் 13 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்கட்சியத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் . ரூ.56.36 கோடி மதிப்பீட்டில் 55,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள “பொருநை அருங்காட்சியகத்தை” திறந்து வைத்து பார்வையிட்டார். நெல்லையில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்தும் மனித நேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழாவில் இன்று மாலை பங்கேற்றார்.

தொடர்ந்து ரூ.62 கோடியில் அமைக்கப்பட்ட பொருநை அருங்காட்சியகத்தை இன்று இரவு திறந்து வைக்கிறார். நாளை (21ம் தேதி) நடக்கும் அரசு விழாவில் நெல்லை மாவட்டத்திற்கு ரூ.639 கோடி மதிப்பிலான திட்டங்களை அர்ப்பணிக்கிறார்.

இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 12.00 மணிக்கு தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கேஎன்நேரு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோதங்கராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள், கலெக்டர்கள் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் காரில் நெல்லை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லை வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் மதிய உணவு சாப்பிட்டு ஓய்வெடுத்தார். பின்னர் மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லை டக்கரம்மாள்புரத்தில், தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலத்தின் சாராள் தக்கர் கன்வென்ஷன் சென்டர் பிரதான நுழைவு வாயிலை திறந்து வைத்தார்.

தொடர்ந்து அங்குள்ள தரிசனபூமியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்தும் மனித நேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்கிறார். இதையொட்டி டக்கரம்மாள்புரம் விழா கோலம் பூண்டுள்ளது. கிறிஸ்துமஸ் விழாவை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ரெட்டியார்பட்டி மலை அருகே உள்ள விலக்கு பகுதியில் பாளை தெற்கு ஒன்றிய முன்னாள் செயலாளர் கேஎஸ் தங்கபாண்டியன் நினைவு கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைக்கிறார்.

அதன்பின்னர் இரவு 8 மணிக்கு நெல்லை ரெட்டியார்பட்டி மலைச்சாலையில் தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் வகையில் ரூ.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். அங்கு ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை என அமைக்கப்பட்டுள்ள தனித்தனி வளாகங்கள், அகழாய்வின் போது கிடைத்த பொருட்கள், தமிழர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வீடியோக்கள், அதற்காக அமைக்கப்பட்டுள்ள திரையரங்கம் ஆகியவற்றை பார்வையிடுகிறார். முதல்வர் அருங்காட்சியகத்தை திறப்பதையொட்டி அங்கு மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
விழாவை முடித்துக் கொண்டு வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதல்வர் இரவு ஓய்வெடுக்கிறார்.

நாளை 21ம் தேதி (ஞாயிறு) காலை 10.30 மணிக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடக்கும் அரசு விழாவிற்கு வருகிறார். அங்கு புதிய அரசு பஸ் வழித் தடங்களை தொடங்கி வைத்து, மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்களை வழங்குகிறார். தொடர்ந்து நடைபெறும் விழாவில் ரூ.181.89 கோடியில் முடிவடைந்த 31 திட்டப் பணிகளை துவக்கி வைத்து, ரூ.356.59 கோடி மதிப்பில் 11 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இவ்வாறாக மொத்தம் ரூ.538.48 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கிறார். இது தவிர ரூ.100 கோடியே 95 லட்சம் மதிப்பில் 44 ஆயிரத்து 924 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். இந்த விழாவில் மட்டும் மொத்தம் ரூ.639 கோடி மதிப்பிலான திட்டங்களை நெல்லை மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணிக்கிறார். இதற்காக 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

 

Tags : Chief Minister ,M.D. ,Paranai Museum ,Tirunelveli ,K. Stalin ,Thirunelveli ,Retiyarpati ,Bananai Museum ,Matanai Museum ,Nella ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...