×

கொல்கத்தாவில் ராணுவ தளபதிகள் மாநாடு: 15ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

கொல்கத்தா: கொல்கத்தாவில் வரும் 15ம் தேதி துவங்கி 3 நாள் நடக்கும் ஒருங்கிணைந்த ராணுவ தளபதிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ‘சீர்திருத்தங்களின் ஆண்டு – எதிர்காலத்திற்கான உருமாற்றம்’ என்ற கருப்பொருளை கொண்டுள்ள இந்த மாநாடு 3 நாள் நடைபெறும்.

இந்த மாநாட்டில் உயர்மட்ட சிவில் மற்றும் ராணுவத் தலைமையை ஒன்றிணைத்து கருத்தியல் மற்றும் மூலோபாய மட்டங்களில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட உள்ளது. அதிகரித்து வரும் சிக்கலான புவி மூலோபாய நிலப்பரப்பில் சுறுசுறுப்பான, தீர்க்கமான ஆயுத படைகளை வலுப்படுத்துவதற்கு இந்த விவாதங்கள் முயலும்.

மாநாட்டில் ஆயுத படைகளின் பல்வேறு நிலைகளை சேர்ந்த அதிகாரிகள் வீரர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இதில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் பாதுகாப்பு துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் பங்கேற்கிறார்கள்.

Tags : Army Chiefs' Conference in ,Kolkata ,Modi ,Combined Army Chiefs' Conference ,Year of Reforms - Transformation for the Future ,
× RELATED யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகியவற்றை...