×

எஸ்ஏ கல்லூரியில் சர்வதேச திரைப்பட விழா

திருவள்ளூர், செப்.9: பூந்தமல்லி – ஆவடி நெடுஞ்சாலையில் திருவேற்காட்டில் உள்ள எஸ்ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் துறை சார்பில், கல்லூரி தாளாளர் வெங்கடேஷ் ராஜா ஆலோசனையின்பேரில், திரைப்படத் துறையின் படைப்பு, தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை அம்சங்களை புரிந்துகொள்ள மாணவர்களுக்கு அனுபவ கற்றல் தளத்தை வழங்கும் விதமாக, மெய் சர்வதேச திரைப்பட விழாவின் திரையிடல் நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ஆரி அர்ஜுனன், தேவ், ஆகாஷ், தங்கமகன் திரைப்பட ஒளிப்பதிவாளர் குமரன், கலை இயக்குநர் ஸ்ரீ ராமன், எம்ஐஎப்எப் விழா தயாரிப்பாளர் ஜெயசீலன், இயக்குநர் எஸ்.சாம்,
நடிகைகள் சுவாதி, ஷீலா, நிதி பிரதீப், வர்ஷினி, வி.ஜே.நிக்கி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களுடன் கலந்துரையாடி, திரைப்படத் தயாரிப்பு, நடிப்பு, ஒளிப்பதிவு, பாடல் வரிகள், இயக்கம் மற்றும் தயாரிப்பு தொடர்பான பல்வேறு அம்சங்களை அறிந்து கொண்டனர்.

Tags : International Film Festival ,SA College ,Thiruvallur ,Department of Visual Communication ,SA College of Arts and Science ,Thiruverkot ,Poonamalli-Avadi highway ,Venkatesh Raja ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...