×

டிடிவி தினகரன் என்னை பற்றி இப்படி பேசியிருப்பது வருத்தமாக உள்ளது: நயினார் நாகேந்திரன் பேச்சு

 

நெல்லை : டிடிவி தினகரனுக்கும் எனக்கும் இதுவரை எந்த கருத்து வேறுபாடும் இருந்ததில்லை. ஆனால் திடீரென ஏன் என் மீது குற்றம்சாட்டுகிறார் என்று தெரியவில்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். ஈபிஎஸ், டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் எனது நெருங்கிய நண்பர்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைவராக எடப்பாடியை நான் அறிவிக்கவில்லை. அண்ணாமலை, ஈபிஎஸ்யை ஏற்கவில்லை என டிடிவி தினகரன் சொல்கிறார். ஈபிஎஸ் முதல்வர் வேட்பாளராக வெற்றி பெற வேண்டும் என நெல்லை மாநாட்டில் அண்ணாமலை நேரடியாக அறிவித்தார். டிடிவி தினகரன் கூட்டணியிலிருந்து வெளியேற நான் காரணம் என எதன் அடிப்படையில் கூறுகிறார்.

2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக எங்களுடன் இருந்தது. 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்தது. அமித்ஷாதான் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கினார். தமிழகத்தில் தேஜ கூட்டணி அமைத்து பழனிசாமியை தலைவராக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். பலமுறை பேசிய போதும் டிடிவி தினகரன் என்னிடம் எந்த கருத்தையும் சொல்லவில்லை. NDA கூட்டணியில் சிறிய கட்சி, பெரிய கட்சி என்றெல்லாம் கிடையாது.

தேசிய தலைமை சொல்வதை ஏற்று நடக்க வேண்டியது மாநிலத் தலைமையான எனது பணி. அதிமுக எங்கள் கூட்டணியில் உள்ளபோது செங்கோட்டையனை பாஜகவுக்கு அழைப்பது நாகரிகமாக இருக்காது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று ஆரம்ப காலத்தில் இருந்து கூறி வருகிறேன். டிடிவி தினகரன் என்னை பற்றி இப்படி பேசியிருப்பது வருத்தமாக உள்ளது

Tags : DITV DINAKARAN ,NAYANAR NAGENDRAN ,Nella ,DTV Dinakaran ,Nayinar Nagendran ,EPS ,
× RELATED அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ...