×

தேவேந்திரகுல வேளாளர் அரசாணை கோரி தமமுக மனித சங்கிலி போராட்டம்

விருதுநகர்/திருவில்லி, டிச.16:  ஏழு உட்பிரிவுகளை ஒன்றாகஇணைத்து  தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி  தமமுக சார்பில் கருப்பு சட்டை அணிந்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலகம் எதிரில் நான்குவழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.
 
இதேபோல் திருவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவிலில் நடந்த மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் வைரகுட்டி, வத்ராப் துணை சேர்மன் ரேகா வைரகுட்டி ஆகியோர் தலைமை வகித்தனர். விருதுநகர்  மேற்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் முத்துராஜ் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Tags : Tamumuka ,government ,Devendrakula Vellalar ,
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...