×

ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றங்களைச் செய்ய அரசை தூண்டியது எது?: முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் கேள்வி

சென்னை: ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றங்களைச் செய்ய அரசை தூண்டியது எது? என முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்றைய தினம் செப்டம்பர்.3ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரியை எளிமையாக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. பின்னர், திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதங்களை ஒன்றிய நிதியமைச்சர் அறிவித்தார். பொதுமக்களுக்கு உதவும் வகையில் ஜிஎஸ்டி வரியை 2 அடுக்குகளாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், 8 ஆண்டுகள் தாமதமானது ஏன் எனக் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இது குறித்து முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறுகையில், ஜிஎஸ்டியின் வடிவமைப்பு மற்றும் விகிதங்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம், ஆனால் எங்கள் கோரிக்கைகள் செவிடன் காதில் விழுந்தது போல் இருந்துவிட்டது. ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணக் குறைப்பு வரவேற்கத்தக்கது, ஆனால் இது 8 ஆண்டுகாலம் தாமதமாகியுள்ளது. தற்போது இந்த மாற்றங்களைச் செய்ய அரசை தூண்டியது எது? மெதுவான வளர்ச்சியா? பெருகிவரும் குடும்பக் கடனா? குறைந்து வரும் குடும்ப சேமிப்பா.? என கேள்வி எழுப்பினார்.

Tags : EU ,Finance Minister ,chidambaram ,Chennai ,56th GST Council meeting ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,Delhi ,
× RELATED திருப்பரங்குன்றம் சுல்தான்...