×

தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க வேண்டும் கலெக்டரிடம் காயமடைந்தோர் அமைப்பு கோரிக்கை

பெரம்பலூர்,டிச.16: தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக் கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க வேண்டும் என பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு சார்பாகக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பின் சார்பாக நேற்று அமைப்பின் மாவ ட்ட பொறுப்பாளர் கோவிந்தராசு தலைமையில், நேற்று 50க்கும்மேற்பட்ட தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தில் தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபரின் உதவியாளருக்கு அல்லது குடும்பத்தில் ஒரு நபருக்கு 100 நாள் வேலை தரவேண்டும்.

சாய்வுதளம் அமைத்து வீல் சேரு டன் சென்று வரக்கூடிய கழிவறை அமைத்துத் தரவேண்டும். சுயதொழில் தொ டங்க வட்டி இல்லாத மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி செய்ய வேண்டும். தண்டுவடம் பாதிக்கப்பட்ட நண்பர்கள் அனைவரின் பாதுகாவலர்களுக்கும் பரா மரிப்பு உதவித்தொகை வழங்க வேண்டும்.ஆடு மாடு வளர்க்க இலவச கொட் டகை அமைத்து தர வேண்டும். தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க வேண்டும். அருகில் இருக் கும் தார்சாலையில் இருந்து, வீட்டிற்கு அல்லது கழிவறைக்கு சாலை அமைத்துத் தர வேண்டும் என 7 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அந்தக் கோ ரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Injured Organization ,Collector ,
× RELATED அரசு, தனியார் தொழிற்நிலையங்களில்...