- திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
- ஆர்.கே.பேட்டை.
- ஆர்.கே.பேட்டை
- தீ மிதி திருவிழா
- திரௌபதி அம்மன் கோவில்
- அய்யநேரி
ஆர்.கே.பேட்டை, செப். 2: ஆர்.கே.பேட்டை அடுத்த அய்யனேரி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் கடந்த மாதம், 18ம் தேதி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் மூலவருக்கு சிறப்பு அபேிஷகம், மதியம் மகா பாரத சொற்பொழிவு, இரவு நாடகமும் நடந்து வந்தது. மேலும், திரவுபதியம்மன் திருமணமும், அர்ஜூனன் தபசும் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 11 மணியளவில் கோயில் வளாகத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பீமன், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சியை நாடக கலைஞர்கள் தத்ரூபமாக நடித்து காண்பித்தனர்.
தொடர்ந்து அய்யனேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இரவு 8 மணிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். இரவு 8.30 மணிக்கு வாணவேடிக்கை மற்றும் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை அய்யனேரி கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
