×

கும்மிடிப்பூண்டி ரயில் சேவை பாதிப்பு

 

கும்மிடிப்பூண்டி: அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலில் மாடு சிக்கியதால் சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் அத்திப்பட்டு ரயில் நிலையத்திற்குள் நுழைந்த போது மாடு ஒன்று சிக்கியதால் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. ரயிலில் சிக்கிய மாட்டை அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில்கள் ஆங்காங்கே ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டுள்ளதால் ரயில் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்

Tags : KUMMIDIPUNDI TRAIN ,Kummidipundi ,Chennai ,Kummidipundi Markt ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...