×

கொழுக்கட்டை செய்து தராததால் தூக்கிட்டு மாணவி தற்கொலை

மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சக்தி நகர் இபி சாலையில் வசிப்பவர் முனுசாமி. இவரது மகள் மோகனபிரியா(14). அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் மாலை மோகனபிரியா, தாயாரிடம் கொழுக்கட்டை செய்து தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் நாளைக்கு செய்து தருகிறேன் எனக் கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி திடீரென வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தொங்கி உள்ளார். உடனடியாக அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Marakanam ,Munusamy ,Sakthi Nagar EP Road, Marakanam, Villupuram district ,Mohanapriya ,Government Girls' High School ,
× RELATED ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம்6...