×

வனக்காவலர், வனக்காப்பாளர் பதவி சான்றிதழை முழுமையாக பதிவேற்ற கால அவகாசம்: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-குரூப் 4ல் உள்ள வனக்காவலர் மற்றும் வனக்காப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்காக தேர்வர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் சில தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை சரியாக பதிவேற்றவிலலி என்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இத்தகைய தேர்வர்களுக்கு இறுதிவாய்ப்பு வழங்கும் விதமாக 30ம் தேதி(நேற்று) முதல் வரும் 5ம் தேதி இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் அத்தேர்வர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே. அத்தேர்வர்கள் அனைவரும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு தளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத தேர்வர்களின் உரிமைகோரல், விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

Tags : Forest Guard ,TNPSC ,Chennai ,Tamil Nadu Public Service Commission ,Shanmuga Sundaram ,Tamil Nadu Public Service Commission… ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்