சென்னை: நல்லகண்ணுவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். நல்லகண்ணு உடல் நிலை குறித்து முத்தரசன் அளித்த பேட்டியில்; நல்லகண்ணுவை பழைய நிலைக்கு கொண்டுவர மருத்துவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். மருத்துவமனையில் நல்லகண்ணுவை முதல்வர் பார்த்து வணக்கம் செய்தபோது அவரும் பதிலுக்கு வணக்கம் வைத்தார் என அவர் தெரிவித்தார்.
