×

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம்

காரியாபட்டி ஆக.29: விருதுநகர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம் காரியாபட்டியில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இனியவன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மண்டலச் செயலாளர் முருகன், மாநில துணைச் செயலாளர் ஜோசப், மாவட்ட நிர்வாகிகள் சண்முகவேல், பனைக்குடி பாக்கியராஜ், தமிழ்கண்ணன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் வருகின்ற 6ம் தேதி கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா மற்றும் மதச் சார்பின்மை காப்போம் மக்கள் திரள் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்துவது பற்றியும், வாக்கு சாவடி முகவர்கள் அமைப்பது சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் முதிலன் ராமநாதன், நகரச் செயலாளர் இளந்தமிழ், இராமர், மாவட்ட நிர்வாகிகள் குருசாமி, இன்னாசி, கடல்வண்ணன், முனியசாமி, மாணிக்கவேல், மகளிர் விடுதலை இயக்க நிர்வாகிகள் சுப்புலட்சுமி, இராஜேஸ்வரி, மகாலட்சுமி செல்வி, பாப்பணம் காவியன், முத்துப்பாண்டி, இரவி, சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Liberation Leopards Party District Executive Meeting ,Gariyapati ,Virudhunagar East District Liberation Leopards Party Executive Committee Meeting ,Gariyabati ,District Secretary ,Iniawan ,Zonal Secretary ,Murugan ,Deputy Secretary of State ,Joseph ,District Administrators ,Sanmugavel ,Panaikudi Bakiraj ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...