×

விஜய் மாநாடுக்கு சென்று மாயமானவர் சடலமாக மீட்பு: 5 நாளுக்கு பின் அடையாளம் தெரிந்தது

மேலூர்: மதுரை மாவட்டம், பாரபத்தியில் விஜய்யின் தவெக மாநில மாநாடு கடந்த 21ம் தேதி நடந்தது. அதில் பங்கேற்ற வேலூர் மாநகர் கஸ்பா பகுதியை சேர்ந்த மதன் (41) வெயிலில் மயங்கி விழுந்து உள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் 22ம் தேதி ஆம்புலன்ஸ் மூலம் வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கொட்டாம்பட்டி சூரப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே ஆம்புலன்சில் இருந்து இயற்கை உபாதைக்காக இறங்கிய மதன் திடீரென மாயமானார். அதே நேரத்தில் சூரப்பட்டி விலக்கு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அடையாளம் தெரியாத நபர் பலியானதாக வழக்குப்பதிந்து, உடலை மேலூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் மதனை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அனைத்து ஸ்டேஷன்களிலும் போலீசார் விசாரணை நடத்தினர். இதைதொடர்ந்து விபத்தில் ஒருவர் பலியானதாக தகவல் தெரிந்து, குடும்பத்தினர் சென்று பார்த்து அது மதன் என்பதை நேற்றுமுன்தினம் உறுதி செய்தனர். தொடர்ந்து 5 நாட்களுக்குப் பிறகு விபத்தில் இறந்தது வேலூரை சேர்ந்த தவெக தொண்டர் மதன் என்பது தெரியவந்துள்ளது.

Tags : Vijay ,Melur ,Thaveka ,Parapathi, Madurai district ,Madan ,Kasba ,Vellore ,Madurai Government Hospital… ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...