- கொடைக்கானல்
- செல்லத்துரை
- சாமக்காட்டு பள்ளத்தாக்கு
- பெருமாள்மலை உடக்கும்
- கொடைக்கானல், திண்டிகுல் மாவட்டம்
- பெருமாள்மலை
- ராஜசேகர்
- தீபிகா
- ஊட்டி
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள்மலை அடுக்கம் பகுதியில் உள்ள சாமக்காட்டு பள்ளத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகளுக்கு பெருமாள்மலையில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இதற்காக செல்லத்துரை மகன் ராஜசேகருக்கு (25), நிச்சயிக்கப்பட்ட ஊட்டியை சேர்ந்த தீபிகா (20) என்ற இளம்பெண்ணும் வந்திருந்தார். திருமணம் முடிந்த நிலையில், இரவு 11 மணியளவில் ராஜசேகர், தீபிகாவுடன் சாமக்காட்டு பள்ளத்துக்கு ஜீப்பில் சென்றுள்ளார். ஆபத்தான வளைவு ஒன்றில் திரும்பிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஜீப், சாலையோர 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் ராஜசேகரும், தீபிகாவும் படுகாயமடைந்து ஜீப்பிற்குள்ளேயே சிக்கினர். நள்ளிரவு என்பதால் யாருக்கும் விஷயம் தெரியவில்லை. நேற்று அதிகாலை அந்த வழியாக தோட்ட வேலைக்கு சென்றவர்கள், மலைச்சரிவுக்குள் ஜீப் கவிழ்ந்து கிடந்ததை பார்த்து அளித்த தகவலின் பேரில், கொடைக்கானல் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தீபிகா சடலமாக கிடக்க, ராஜசேகர் மட்டும் படுகாயங்களுடன் கிடந்தார். அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இரவு முழுக்க, கடும் குளிரில் பரிதவித்த நிலையில் ராஜசேகர் மீட்கப்பட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
