- கேரளா காங்கிரஸ்
- திருவனந்தபுரம்
- ராகுல் மங்கோட்டம்
- கேரள மாநிலம் பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.
- காங்கிரஸ்
- மலாயலன்
- ரினி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் ராகுல் மாங்கூட்டத்தில். மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். இந்தநிலையில் சமூக ஊடகங்கள் மூலம் தனக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், ஓட்டலுக்கு உல்லாசத்திற்கு அழைத்ததாகவும் மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து வேறு சில இளம்பெண்களும், ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக புகார் கூறினர். ஒரு இளம்பெண்ணை கருச்சிதைவுக்கு வற்புறுத்தியதாகவும் கூறப்பட்டது.
இந்தநிலையில் ராகுல் மாங்கூட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இது ஒருபுறம் இருக்க, ராகுல் மாங்கூட்டத்தில் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி சமூக ஊடகங்களில் பெண்களின் விருப்பத்திற்கு மாறாக பின்தொடர்ந்து துன்புறுத்துதல், பெண்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது, கட்டாய கருக்கலைப்பு செய்ய தூண்டும் வகையில் தகவல்களை அனுப்பியது, தொலைபேசி அழைப்புகள் மூலம் அவர்களை அச்சுறுத்தியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.புகார் கூறிய இளம்பெண்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
