×

தஞ்சையை ஆண்ட பாசிச பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, டிச. 15: தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களின் சமாதி கோயில்களை புனரமைக்கும் பணிகளை கலெக்டர் கோவிந்தராவ் துவக்கி வைத்தார். இதைதொடர்ந்து அவர் கூறுகையில், தஞ்சை மாவட்டம் இந்திய வரலாற்றில் ஒரு தொல்பொருள் மிக்க நகரமாகும். இந்நகரத்தில் பல்வேறு புராதன சின்னங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் மராட்டிய மன்னர்கள் தஞ்சையை ஆண்டபோது விட்டு சென்ற பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க புராதன சின்னங்களை காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. புராதன சின்னங்களை பராமரிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களான இரண்டாம் சரபோஜியின் சமாதி அமைந்துள்ள இடங்களை புதுப்பிக்கும் பணியை ஜெயமாலா ராணி தொண்டு மற்றும் அறக்கட்டளை சார்பில் புராதன சின்னங்கள் புனரமைக்கும் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழு மூலம் இங்கு அமைக்கப்பட்டுள்ள 25க்கும் மேற்பட்ட மன்னர் மற்றும் ராணிகளின் சமாதிகளை ஏற்கனவே உள்ளபடியே ரூ.1 கோடி மதிப்பில் புதுப்பித்து சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான பணிகள் தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் முழுவதும் ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த மாவட்டமாகும். எனவே பொதுமக்களும் புராதன சின்னங்களை பாதுகாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தாசில்தார் வெங்கடேஸ்வரன், சிவாஜிராஜா போன்ஸ்லே மற்றும் பலர் கலந்து கொண்டனர். 25க்கும் மேற்பட்ட மன்னர் மற்றும் ராணிகளின் சமாதிகளை ஏற்கனவே உள்ளபடியே ரூ.1 கோடி மதிப்பில் புதுப்பித்து சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான பணிகள் தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

Tags : Demonstration ,Tanjore ,
× RELATED பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்