×

மதுரை அழகர் கோயிலில் வணிக ரீதியான கட்டுமானங்களுக்கு தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு!!

மதுரை: மதுரை அழகர் கோயிலில் வணிகரீதியான கட்டுமானங்களுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அழகர் கோயில் வளாகத்துக்குள் உபரி நிதியில் கட்டப்படும் வணிக கட்டுமானங்களுக்கு தடை கோரி நாகையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில்; கோயில் நிதியில் அடிப்படை வசதிகள் செய்யப்படும் கட்டுமானங்களுக்கு தடை விதிக்க முடியாது. மேலும், மற்ற கட்டுமானங்கள் மத ரீதியான பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என உறுதி தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.

Tags : Madurai High Court ,Alagar Temple ,Madurai ,Court ,Venkatesh ,Nagai ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...