- சென்னை
- சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- பி. கிருஷ்ணமூர்த்தி
- தலைமை ஆலோசகர்
- சர்வதேச தமிழ் பொறியாளர்கள்
- மன்றம்
- சுற்றுப்புறத் தமிழர் நலத்துறை
- தமிழர்கள்
சென்னை: சர்வதேச தமிழ் பொறியாளர் மன்றத்தின் தலைமை ஆலோசகர் பி.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: அயலக தமிழர் நலத்துறை மூலம் அயலகத்தில் வாழும் தமிழர்களுக்கு மருத்துவ காப்பீடு, அவர்கள் குடும்பத்தினர் கல்வி கற்க சலுகை, ‘வேர்களைத் தேடி’ என்கிற திட்டத்தின் மூலம் பல தலைமுறைகளாக தமிழகத்தின் தொடர்பு இல்லாமல் இருப்பவர்களை அடையாளப்படுத்தி அவர்களை தமிழக அரசின் செலவில் தமிழகம் அழைத்து வந்து முழுமையாக தமிழக கலாச்சாரம், தமிழக வளர்ச்சியல் தொடர்பாக சுற்றுலா அழைத்து சென்று, அவர்கள் அந்நாட்டில் நமது கலாச்சார தூதுவர்கள் என் நியமித்த திட்டங்களால் அவர்கள் மிகவும் பயனடைந்துள்ளனர். அயலகத்தில் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு சட்ட ரீதியாக உதவிகளை மேற்கொள்ள சட்ட வல்லுனர்களை நியமித்ததுள்ளது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
அவர்களோடு சேர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கல்வி முதல் பட்டம் பெற்ற சுமார் 7 ஆயிரம் இளைஞர் மற்றும் பெண்களுக்கு வெளிநாடுகளில் உள்ள அவர்கள் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் பெற்றுத்தரவும் ஒப்பந்தம் செய்துள்ளோம். மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 5 சதவீதம் கூடுதல் இடங்களை ஏற்படுத்தி, 40 சதவீதம் குறைந்த கட்டணத்தில் படிக்க வழிவகை செய்துள்ளதுபோல, வெளிநாடு மாணாக்கர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேருவதற்கும் வழிவகை செய்ய வேண்டும். அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரியப்படுத்தி அதை நடைமுறைபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் உலகலாவிய தமிழ் பொறியாளர்கள் மாநாடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடத்த இருக்கிறோம். மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
