×

கோவையில் வேளாண் சட்டத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் போராட்டம்; 200 பேர் கைது

கோவை, டிச. 15:  விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனங்களின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் 200-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். தமிழகம் முழுவதும் அம்பானி, அதானி நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிக்க வேண்டுகோள் விடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்பு போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  இதன் ஒரு பகுதியாக கோவை புரூக்பீல்டு மால், பன்மால், சின்னமேட்டுப்பாளையம், சுந்தராபுரம், பெரியநாயக்கன்பாளையம் என 6 இடங்களில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர்  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்.

கடும் குளிரில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என கோஷங்களை எழுப்பி, புரூக்பீல்டு சாலையில் இருந்து ரிலையன்ஸ் நிறுவனத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரையும் கைது செய்தனர்.  கோவை புருக் பீல்டு முன்பு நடந்த போராட்டத்திற்கு சிவஞானம் தலைமை தாங்கினார். சி.பி.எம் கிழக்கு நகர செயலாளர் ஜாகிர், வடக்கு நகர செயலாளர் முருகேசன், மேற்கு நகர செயலாளர் முருகன் மற்றும் மூர்த்தி, சுகுமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவை புரூக்பீல்டு, கோவை எஸ்.எஸ்.குளம் சின்ன மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர், மசக்காளிபாளையம் பன்மால், சுந்தராபுரம், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags : protest ,Marxist ,Coimbatore ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...