திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருகிற செப்டம்பர் 7ம் தேதி இரவு 9:50 மணி முதல் செப்டம்பர் 8ம் தேதி அதிகாலை 1:31 மணி வரை சந்திர கிரகணம் நீடிக்கும். எனவே திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் 7ம் தேதி பிற்பகல் 3:30 மணி முதல் செப்டம்பர் 8ம் தேதி அதிகாலை 3 மணி வரை மூடப்படும். சந்திர கிரகணத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன்பு, செப்டம்பர் 7ம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு கோயில் மூடப்படும்.
சுத்தம் செய்து கிரகண தோஷ நிவாரண பூஜைக்கு பிறகு செப்டம்பர் 8ம் தேதி அதிகாலை 3 மணிக்கு கோயில் கதவுகள் மீண்டும் திறக்கப்படும். பக்தர்களுக்கான தரிசனம் செப்டம்பர் 8ம் தேதி காலை 6 மணிக்கு பிறகு மீண்டும் தொடங்கும். எனவே, பக்தர்கள் சிரமங்களை தவிர்க்க திருமலைக்கு தங்கள் யாத்திரையை அதற்கேற்ப திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
